கேரளாவில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

கேரளாவில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கொச்சி மாநகராட்சி மேயருக்கான காங்கிரஸ் வேட்பாளர் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 8, 10 மற்றும் 14ம் தேதிகளில் என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்றது. தபால் ஓட்டுகளையும் சேர்த்து 3 கட்டங்களாக நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 78.64 சதவீத வாக்குகள் பதிவானது. நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மேயர் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தது பரபரப்பாக பேசப்படுகிறது.

கேரளாவில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்
பா.ஜ.க.

கொச்சி மாநகராட்சி நார்த் ஐலேண்ட் வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக என்.வேணுகோபால் போட்டியிட்டார். அவர்தான் காங்கிரஸ் சார்பில் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். எப்படியும் தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையில் இருந்த என்.வேணுகோபாலுக்கு தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. கொச்சி மாநகராட்சி நார்த் ஐலேண்ட் வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் என்.வேணுகோபால் தோல்வி அடைந்தார்.

கேரளாவில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வேட்பாளரிடம் தோல்வி அடைந்த காங்கிரஸ் மேயர் வேட்பாளர்
வேணுகோபால்

இது தொடர்பாக வேணுகோபால் கூறுகையில், இது நிச்சயம் வெற்றி பெறக்கூடிய இடம். என்ன நிகழ்ந்தது என்று என்னால் சொல்ல முடியாது. கட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை. மின்னணு வாக்கு எந்திரத்தில்தான் பிரச்சினை இருந்தது. அதுதான் பா.ஜ.க.வின் வெற்றி பெற காரணமாக இருக்கலாம். இதுவரை மின்னணு வாக்கு எந்திரம் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் செல்வது குறித்து நான் இன்னும் முடிவு செய்யவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.