பெட்ரோல் பங்குகளின் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும்… காங்கிரஸ் ஆவேசம்

பெட்ரோல் பங்குகளின் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும்… காங்கிரஸ் ஆவேசம்

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் பங்குகளின் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பது மத்திய அரசின் மீது மீண்டும் அதிருப்தி மனநிலையை தூண்டியுள்ளது. பெட்ரோல் விலை தொடர் உயர்வுக்கு பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தற்போது பெட்ரோல் பங்குகள் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும் என பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி நக்கல் செய்துள்ளது

பெட்ரோல் பங்குகளின் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும்… காங்கிரஸ் ஆவேசம்
ஸ்ரீவத்ஸா

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீவத்ஸா டிவிட்டரில், பெட்ரோல் விலை 90 ரூபாய். உண்மையான விலை 30 ரூபாய். மோடி வரி 60 ரூபாய். அனைத்து பெட்ரோல் பங்குகளின் பெயரையும் நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும் என்று பதிவு செய்து இருந்தார்.

பெட்ரோல் பங்குகளின் பெயரை நரேந்திர மோடி வசூல் மையம் என்று மாற்ற வேண்டும்… காங்கிரஸ் ஆவேசம்
சுப்பிரமணியன் சுவாமி

கடந்த சில தினங்களுக்கு முன் பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்பது இந்திய மக்களிடம் இந்திய அரசின் மிகப்பெரிய சுரண்டலாகும். சுத்திகரிப்பு நிலையத்துக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.30 (லிட்டருக்கு) ஆகும். அனைத்து விதமான வரிகள் மற்றும் பெட்ரோல் பம்ப் கமிஷனும் மீதமுள்ள ரூ.60ஐ சேர்க்கின்றன. என் பார்வையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அதிகபட்சம் ரூ.40க்குதான் விற்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.