அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக மன கசப்பு இருந்து வந்தது. தற்போது அது வெளிப்படையாக வெளியே தெரிந்து விட்டது. தற்போது டெல்லியில் சச்சின் பைலட் டெல்லியில் உள்ளார். அவரது ஆதரவு காங்கிரஸ் எம்.எல்,ஏ.க்கள் 30 பேரும், சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் டெல்லியில் முகாமிட்டனர்.

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்
சச்சின் பைலட், அசோக் கெலாட்

காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்தித்து ராஜஸ்தான் அரசியல் விவகாரம் தொடர்பாக சச்சின் பைலட் பேசுவதற்காக சென்றதாக கூறப்பட்டது. மேலும், டெல்லியில் உள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களது சொந்த வேலையாக வந்ததாக கூறினர். ஆனால் தற்போது ஜோதிராதித்ய சிந்தியா மாதிரி சச்சின் பைலட்டும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்து அந்த கட்சியில் இணைய போவதாக உறுதிப்படுத்த படாத தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து திருப்பங்கள். பா.ஜ.க. தலைவர் நட்டாவை சந்திக்கும் சச்சின் பைலட்…பெரும்பான்மையை இழக்கும் காங்கிரஸ்

பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவை சச்சின் பைலட் இன்று சந்திக்க இருப்பதாக தகவல். ஒருவேளை சிந்தியா மாதிரி சச்சின் பைலட்டும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும். இதனையடுத்து பா.ஜ.க. அங்கு ஆட்சியமைப்பதற்கான வேலைகளில் இறங்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.