செய் அல்லது செத்துமடி – மகாத்மா காந்தி, அநீதிக்கு எதிராக போராடுங்கள், பயப்பட வேண்டாம்…. ராகுல் காந்தி

செய் அல்லது செத்துமடி – மகாத்மா காந்தி,  அநீதிக்கு எதிராக போராடுங்கள், பயப்பட வேண்டாம்…. ராகுல் காந்தி

1942 ஆகஸ்ட் 8ம் தேதியன்று பம்பாயில் (தற்போது மும்பை) அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நம் நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மகாத்மா காந்தியால் வெள்ளையனே வெளியேறு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதற்கான இறுதி உந்துதலில் செயல் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துடன் நம் நாட்டு மக்களுக்கு மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தார்.

செய் அல்லது செத்துமடி – மகாத்மா காந்தி,  அநீதிக்கு எதிராக போராடுங்கள், பயப்பட வேண்டாம்…. ராகுல் காந்தி

நேற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 78வது ஆண்டு நிறைவுவிழா. அதனை முன்னிட்டு ராகுல் காந்தி நேற்று டிவிட்டரில் ஒரு வித்தியாசமான கருத்தை பதிவு செய்து இருந்தார். ராகுல் காந்தி டிவிட்டரில், வெளியேறு இயக்கத்தின் 78வது ஆண்டு நிறைவையொட்டி காந்திஜியின் செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துக்கு புதிய அர்த்தம் கொடுக்கப்படவேண்டும். அநீதிக்கு எதிராகப் போராடுங்கள் பயப்பட வேண்டாம். என பதிவு செய்து இருந்தார்.

செய் அல்லது செத்துமடி – மகாத்மா காந்தி,  அநீதிக்கு எதிராக போராடுங்கள், பயப்பட வேண்டாம்…. ராகுல் காந்தி

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் காங்கிரசின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றால் அது கட்சிக்கு பெரிய பலமாக இருக்கும் என அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியோ அதில் விருப்பம் இல்லாதது போல் இருக்கிறார்.