நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி… ராகுல் காந்தி கடும் தாக்கு… பதிலடி கொடுத்த அமித் ஷா

நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி… ராகுல் காந்தி கடும் தாக்கு… பதிலடி கொடுத்த அமித் ஷா

சீன வீரர்களுடன் மோதும் போது இந்திய வீரர்கள் ஆயுதங்கள் வைத்து இருந்தார்களா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி தற்போது பிரதமர் நரேந்திர மோடியை சரண்டர் மோடி என காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு இந்திய நிலத்தை ஒப்படைத்து விட்டார்.

நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி… ராகுல் காந்தி கடும் தாக்கு… பதிலடி கொடுத்த அமித் ஷா

நிலம் சீனமான இருந்தால்: 1. எங்கள் வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? 2. அவர்கள் எங்கே கொல்லப்பட்டனர்? நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி என பதிவு செய்து இருந்தார். இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பேசும் வீடியோவை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி… ராகுல் காந்தி கடும் தாக்கு… பதிலடி கொடுத்த அமித் ஷா

அமித் ஷா டிவிட்டரில், ஒரு துணிச்சலான ராணுவ வீரரின் தந்தை பேசுகிறார். அதில் ராகுல் காந்திக்கு மிக தெளிவான செய்தி உள்ளது. ஒட்டுமொத்த தேசமும் ஒன்றிணைந்திருக்கும் நேரத்தில், ராகுல் காந்தியும அற்ப அரசியலுக்கு மேலே உயர்ந்து தேசிய நலனுக்கு ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என பதிவு செய்து இருந்தார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி இது குறித்து அரசியலில் ஈடுபட வேண்டாம். என் மகன் ராணுவத்தில் போராடினான் மற்றும் ராணுவத்தில் தொடர்ந்து போராடுவான் என சீன வீரர்களுடான மோதலில் காயம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை பேசி இருந்தார்