விவசாயிகள் போராட்டம் நடக்கட்டும்.. நான் 2 நாள் போய்ட்டு போறேன்.. இத்தாலிக்கு பறந்த ராகுல் காந்தி….

விவசாயிகள் போராட்டம் நடக்கட்டும்.. நான் 2 நாள் போய்ட்டு போறேன்.. இத்தாலிக்கு பறந்த ராகுல் காந்தி….

டெல்லியின் எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், ராகுல் காந்தி இத்தாலி சென்றுள்ளதாக வெளியான தகவல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சொந்த வேலையாக நேற்று இத்தாலி கிளம்பி சென்றார். நேற்று கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் இத்தாலி கிளம்பி சென்றதாக தகவல். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வரும் வேளையில், ராகுல் காந்தி திடீரென்று இத்தாலி சென்றது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகள் போராட்டம் நடக்கட்டும்.. நான் 2 நாள் போய்ட்டு போறேன்.. இத்தாலிக்கு பறந்த ராகுல் காந்தி….
கத்தார் ஏர்வேஸ் விமானம்

ராகுல் காந்தியின் அம்மா வழி பாட்டி இத்தாலியில் வசித்து வருகிறார். அண்மையில் கூட ராகுல் காந்தி இத்தாலி சென்று தனது பாட்டியை சந்தித்து விட்டு வந்தார். தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ராகுல் காந்தி சொந்த காரணங்களுக்காக சில நாட்கள் வெளிநாட்டில் இருப்பார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற தகவலை அவர் சொல்லவில்லை.

விவசாயிகள் போராட்டம் நடக்கட்டும்.. நான் 2 நாள் போய்ட்டு போறேன்.. இத்தாலிக்கு பறந்த ராகுல் காந்தி….
ரன்தீப் சிங் சுர்ஜேவாலா

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் குறித்து பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், ராகுல் காந்தி விவசாயிகளின் தர்ணா பகுதியில் எங்கும் தோன்றவில்லை (வரவில்லை), அவர் யாருடனும் பேசவில்லை. எங்களது எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக உள்ளது என்று தெரிவித்தார்.