பா.ஜ.க. கிண்டல் அடித்த பின்பும் மீண்டும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்ற ராகுல் காந்தி

 

பா.ஜ.க. கிண்டல் அடித்த பின்பும் மீண்டும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்ற ராகுல் காந்தி

மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் இருப்பது கூட ராகுல் காந்திக்கு தெரியவில்லை என்று பா.ஜ.க. அமைச்சர் கிண்டல் அடித்த பின்பும், மீண்டும் மீன்வளத்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட அமைச்சகம் அமைப்போம் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி அண்மையில் புதுச்சேரியில் மீனவர் சமுதாய மக்கள் மத்தியில் பேசுகையில், டெல்லியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்க முடியும் என்றால், கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை என்று பேசியிருந்தார். அதாவது மத்தியில் மீன்வளத்துறைக்கு அமைச்சகம் உள்ளநிலையில், மீன்வளத்துறைக்கு அமைச்சகம் இல்லை என்று கூறியதை மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் கிண்டல் செய்து இருந்தார்.

பா.ஜ.க. கிண்டல் அடித்த பின்பும் மீண்டும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்ற ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும் டிவிட்டரில், இத்தாலியில் தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் இல்லை. ராகுல் ஜி, 2019 மே 31ம் தேதியன்று மோடி ஜி ஒரு புதிய அமைச்சகத்தை உருவாக்கினார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ரூ.20,500 கோடியில் ஒரு மாஸ்டர் பிளானை தொடங்கப்பட்டது. இது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2014ம் ஆண்டு வரை அந்த துறைக்காக அரசு செலவிட்ட தொகையை விட பல மடங்கு அதிகம்.

பா.ஜ.க. கிண்டல் அடித்த பின்பும் மீண்டும் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைப்போம் என்ற ராகுல் காந்தி
கிரிராஜ் சிங்

இந்நிலையில், ராகுல் காந்தி கேரளாவில் கொல்லம் தலசேரி கடற்கரையில் மீன மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராகுல் காந்தி அவர்களிடம், நமது விவசாயிகள் நிலத்தில் வேளாண்மை செய்வது போல் கடலில் நீங்கள் செய்கிறீர்கள். டெல்லியில் விவசாயிகளுக்கு ஒரு அமைச்சகம் உள்ளது. உங்களுக்கு தெரியாது, டெல்லியில் யாரும் உங்களுக்காக பேசுவதில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் முதலில் இந்திய மீனவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட (தனி) ஒரு அமைச்சகம் இருக்கும். இதனால் மீனவர்களின் பிரச்சினைகள் தடுக்கவும், பாதுகாக்கவும் முடியும். உங்கள் தேவைகளை கவனிப்பதற்காக நாங்கள் ஒரு பிரத்யேக அமைச்சகத்தை அமைப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். உங்கள் வாழ்க்கையை எவ்வாறு எளிதாக்க முடியும் என்பதை பார்க்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று தெரிவித்தார்.