ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தந்தையும் துரோகிகள்… காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..

ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தந்தையும் துரோகிகள்… காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..

ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தந்தை மாதவ்ராவ் சிந்தியாவும் துரோகிகள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தூரின் சான்வர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் குட்டு. அவர் நேற்று பேசுகையில் கூறியதாவது: துரோகிகள் காரணமாக நான் காங்கிரஸை விட்டு வெளியேற (2018ல்) நேர்ந்தது. ஜோதிராதித்ய சந்தியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மக்களுக்கு துரோகம் செய்த வரலாறு உள்ளது. ராணி ஜான்சி கொல்லப்பட்டதலிருந்து.

ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தந்தையும் துரோகிகள்… காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..
ஜோதிராதித்ய சிந்தியா

மாதவ்ராவ் சிந்தியா கட்சியை விட்டு வெளியேறியபோது நான் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். நான் 10ஆண்டுகளுக்கு முன் எம்.பி.யாக இருந்தபோது, ஜோதிராதித்ய சிந்தியா துரோகம் செய்வார் என்று சோனியா மற்றும் ராகுல் காந்தியிடம் தெரிவித்தேன். நான் சொன்னது சரிதான் என்பது உறுதியாகி உள்ளது.

ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தந்தையும் துரோகிகள்… காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு..
மாதவ்ராவ் சிந்தியா

அவர் (சிந்தியா) பல முறை என்னை அவமானப்படுத்தியதால் நான் சிறிது காலம் காங்கிரஸை விட்டு வெளியேறினேன். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாதநிலையில் கட்சியில் இணைந்துள்ளேன். நான் பா.ஜ.க.வில் இருந்தபோது சித்தாந்தம் வேறுபாடு காரணமாக அந்த கட்சியோடு இணைந்து செயல்பட முடியவில்லை. நான் பா.ஜ.க.வில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.