விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு

விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

3 வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி டெல்லியின் எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார் ஆனால் சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக சொல்லி விட்டது. இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு
பி.எல். புனியா

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான புனியா கூறுகையில், இந்த விவசாயிகள் போராட்டத்தில் 20 நாட்கள் முடிந்து விட்டது. மத்திய அரசு போல் இல்லாமல் இந்திய மக்கள் விவசாயிகளின் எதிர்ப்பை ஆதரிக்கின்றனர். இந்த போராட்டத்தின் பிம்பத்தை அழிக்க பா.ஜ.க.வும், மத்திய அரசும் முயற்சி செய்கின்றன. டெல்லி எல்லைகளில் நடந்த விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

விவசாயிகளின் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. அரசு முயற்சி… காங்கிரஸ் குற்றச்சாட்டு
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் எந்தவொரு அரசியல் கட்சிகளின் அஜானாடவுன் தொடர்பு கொள்ள முயற்சி செய்யவில்லை நீண்ட காலத்துக்கு விவசாயிகளின் நலனுக்கானது இந்த போராட்டம். எல்லைகளில் போராடும் விவசாயிகளன் ஒற்றுமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கே மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று தெரிவித்தார்.