சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களின் மாறுப்பட்ட கருத்து

சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களின் மாறுப்பட்ட கருத்து

பப்ஜி உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் இடையே மாறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளது

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் மாநிலங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் பப்ஜி, பாய்டு, பாய்டு எக்ஸ்பிரஸ் மற்றும் டென்சென்ட் வியுன் உள்பட சீனாவுடன் தொடர்புடைய 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் இந்த தடை நடவடிக்கையை வழக்கம் போல் காங்கிரஸ் கட்சியில் ஒரு சாரார் ஆதரவும், ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களின் மாறுப்பட்ட கருத்து
சீன செயலிகளுக்கு தடை

சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததை காங்கிரஸ் கட்சியின் மிலிந்த் தியோரா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், உலகின் டாப் 10 தொழில்நுட்ப நிறுவனங்களில் ஐந்தை உருவாக்க சீனாவுக்கு இணைய தேசியவாதம் உதவியது. 59 மற்றும் 119 சீன செயலிகள் மீதான தடை, இந்திய தொழில்முனைவோருக்கு சர்வதேச தரத்தில் தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்க உதவும். இந்தியா தனது வளர்ந்து வரும் 50 கோடி ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் மற்றும் 70 கோடி இணையதள சந்தாதாரர்களிடமிருந்து சக்தியை பெறுகிறது என பதிவு செய்து இருந்தார்.

சீன செயலிகளுக்கு தடை.. மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களின் மாறுப்பட்ட கருத்து
மிலிந்த் தியோரா

அதேவேளையில் மிலிந்த் தியோராவின் கருத்துக்கு எதிர் மாறாக தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டியின் தலைவர் மோகன் குமாரமங்கலம் கருத்து தெரிவித்துள்ளார். மோகன் குமாரமங்கலம் டிவிட்டரில், சீனாவில் இணைய தேசியவாதம் என்பது இந்தியாவுக்கு எதிரானது அல்ல, அது சீனா சார்பு. இந்தியாவில் இணைய தேசியவாதம் என்பது இந்தியா சார்பு அல்ல. அது சீனாவுக்கு எதிரானது என பதிவு செய்துள்ளார்.