காகித புலியா அல்லது சர்க்கஸ் புலியா?.. சிந்தியாவின் எச்சரிக்கைக்கு குசும்பாக பதிலடி கொடுத்த கமல்நாத்…

காகித புலியா அல்லது சர்க்கஸ் புலியா?.. சிந்தியாவின் எச்சரிக்கைக்கு குசும்பாக பதிலடி கொடுத்த கமல்நாத்…

பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டி ஒன்றில், புலி இன்னும் உயிருடன் இருக்கிறது என காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய சிங் மற்றும் கமல் நாத்துக்கு சொல்லி கொள்கிறேன் என எச்சரிக்கும் விதமாக கூறியிருந்தார். அதற்கு கமல் நாத் மற்றும் திக்விஜய சிங்கும் குசும்பாக பதிலடி கொடுத்துள்ளனர்.

காகித புலியா அல்லது சர்க்கஸ் புலியா?.. சிந்தியாவின் எச்சரிக்கைக்கு குசும்பாக பதிலடி கொடுத்த கமல்நாத்…

ஜோதிராதித்ய சிந்தியாவின் கருத்து குறித்து மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் மூத்த தலைவருமான கமல்நாத் கூறுகையில், அது காகித புலியா அல்லது சர்க்கஸில் இருக்கும் புலியா என கேள்வி எழுப்பினார். திக்விஜய சிங் பதிலளிக்கையில், இரண்டு புலிகளும் (சிவ்ராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சந்தியா) கடைசியில் பிராந்திய சண்டையில் முடிவடையும் என தெரிவித்தார்.

காகித புலியா அல்லது சர்க்கஸ் புலியா?.. சிந்தியாவின் எச்சரிக்கைக்கு குசும்பாக பதிலடி கொடுத்த கமல்நாத்…

மத்திய பிரதேச அமைச்சரவையை முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கடந்த சில தினங்களுக்கு முன் விரிவாக்கம் செய்தார். அப்போது புதிதாக 28 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இதனையடுத்து அம்மாநில அமைச்சர்களின் எண்ணிக்கை 34ஆக (சிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட) அதிகரித்தது. தற்போது இது அரசியலமைப்பு விதிமுறைகளுக்கு புறம்பானது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. அரசியலமைப்பு விதிமுறைகளின்படி, ஒரு மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்துக்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை இருக்க கூடாது. ஆனால் தற்போது அதனை காட்டிலும் அதிகமாக அமைச்சர்கள் உள்ளனர் எனவே மத்திய பிரதேச அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.