வருவாய் துறையை சிந்தியா ஆதரவாளர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க… பா.ஜ.க. முதல்வருக்கு காங்கிரஸ் கோரிக்கை

மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் கமல் நாத்துக்கும், அப்போது காங்கிரஸில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.க.வில் ஐக்கியமானார். இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து முதல்வர் சிவ்ராஜ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி மலர்ந்தது.

ஜோதிராதித்ய சிந்தியா

அண்மையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனது அமைச்சரவையை இரண்டாவது முறையாக விரிவாக்கம் செய்தார். மொத்தம் 28 அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்களில் 12 பேர் சிந்தியா முகாமை சேர்ந்தவர்கள். அமைச்சர்கள் யாருக்கும் இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில், வருவாய் துறையை யாருக்கு வேண்டுமானாலும் கொடுங்க சிந்தியா ஆதரவு அமைச்சர்களுக்கு மட்டும் கொடுக்காதீங்க என காங்கிரஸ் தலைவர் ஒருவர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்

காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் இது தொடர்பாக கூறியதாவது: சிந்தியா பெயரில் அரசு நிலங்கள் உள்ளதாக குவாலியர் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்களுடன் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருவாய் துறை அமைச்சர் உதவியுடன் தனது அறக்கட்டளை பெயரில் அரசு நிலங்களை அவர் பெறுகிறார். ஆகையால் சிந்தியா முகாமிலிருந்து வருவாய் துறையை அமைச்சரை தேர்வு செய்ய வேண்டாம் என முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். 7.5 கோடி மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சொத்துக்களை முதல்வர் பாதுகாக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசு நிலங்கள் சிந்தியா குடும்பத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விஸ்வாஸ் சாரங்

காங்கிரஸ் தலைவரின் குற்றச்சாட்டுக்கு மத்திய பிரதேச கேபினட் அமைச்சர் விஸ்வாஸ் சாரங் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் தனது மன சமநிலையை இழந்து விட்டார். இதே பரிந்துரைகளை முன்னாள் முதல்வர் கமல் நாத்துக்கும் வழங்கப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சிந்தியா நீதிக்காக போராடினார், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யாதது மற்றும் மாநிலத்தில் காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்தியதால் அவர் அந்த கட்சியிலிருந்து விலகினார். அவர் தனது சொந்த நலனுக்காக காங்கிரசிலிருந்து விலகவில்லை. கமல்நாத் தலைமையிலான அரசில் கோவிந்த் சிங்தான் வருவாய் துறை அமைச்சராக இருந்தார் என தெரிவித்தார்.

Most Popular

“நீங்க இதெல்லாம் செய்திருந்தா இந்நேரம் உங்கள் ஏடிஎம் கார்டை வேறு யாராவது காப்பி எடுத்திருப்பார்கள்” -உஷார் !

ஹரியானாவின் ஹிசாரில் வசிக்கும் அனில் குமார் மற்றும் ஹரியானாவின் பிவானியில் வசிக்கும் வினோத் குமார் ஆகிய இருவருக்கும் அடுத்தவர் ஏடிஎம் கார்டை காப்பி எடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை ஆட்டைய...

அமித்ஷாவுடன் தொடர்பு… கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்ட 3 அமைச்சர்கள்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தொடர்பிலிருந்த மூன்று மத்திய அமைச்சர்கள் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு...

நெல்லையில் மேலும் 147 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 5,788 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதிய கல்விக் கொள்கை: மாணவர்கள் நலன் சார்ந்த முடிவைத் தமிழக அரசு அறிவிக்கும்! – ஜி.கே.வாசன் நம்பிக்கை

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு மாணவர்கள் வருங்கால நலன் சார்ந்த நிறைவான முடிவை அறிவிக்கும் என்று ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வியாளர்கள், மாநில...