வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை… மீண்டும் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்

வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை… மீண்டும் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்

வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை என்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான சந்தேகத்தை மீண்டும் காங்கிரஸ் கட்சி கிளப்பியுள்ளது.

நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தது முதல் அதன் மீதான நம்பக்தன்மையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் நிரூபித்த பிறகும் எதிர்க்கட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான சந்தேகம் போக மாட்டேன் என்கிறது. பழையப்படி வாக்கு சீட்டு அடிப்படையில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை… மீண்டும் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்
திக்விஜய சிங்

இந்த சூழ்நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பக்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பவில்லை… மீண்டும் சந்தேகத்தை கிளப்பும் காங்கிரஸ்
இந்திய தேர்தல் ஆணையம்

திக்விஜய சிங் இது தொடர்பாக டிவிட்டரில், இந்த தொழில்நுட்ப காலத்தில், வளர்ந்த நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (ஈ.வி.எம்.) நம்பவில்லை. ஆனால் இந்தியாவிலும் மற்றும் சில சிறிய நாடுகளிலும் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடத்தப்படுகிறது. வளர்ந்த நாடுகள் ஏன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில்லை? ஏனென்றால் அதனுடன் சிப்பை வைத்து ஹேக் செய்யலாம் என பதிவு செய்து இருந்தார்.