பா.ஜ.க. நடத்திய மவுன போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை.. திக்விஜய சிங்

பா.ஜ.க. நடத்திய மவுன போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை.. திக்விஜய சிங்

மத்திய பிரதேசத்தில் கமல் நாத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் மவுன போராட்டம் நடத்தியது குறித்து திக்விஜய சிங் கூறுகையில், இந்த போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை என்று கிண்டல் அடித்தார்.

மத்திய பிரதேசத்தில்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தலைவருமான கமல் நாத் பா.ஜ.க. பெண் வேட்பாளர் இமார்டி தேவியை அயிட்டம் என்று கூறியது அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கமல் நாத்தை கண்டித்து மத்திய பிரதேச பா.ஜ.க.வினர் நேற்று மவுன போராட்டம் நடத்தினர். கமல் நாத் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

பா.ஜ.க. நடத்திய மவுன போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை.. திக்விஜய சிங்

இந்த விவகாரத்தில் கமல் நாத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் கமல் நாத் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியாக ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலையான சம்பவத்தை கையில் எடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங். அவர் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கமல் நாத் ஜி எந்த சூழலில் சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை. பா.ஜ.க. இன்று (நேற்று) செய்து வரும் நாடகத்தின் பின்னால் உள்ள தேவையும் எனக்கு தெரியவில்லை.

பா.ஜ.க. நடத்திய மவுன போராட்ட நாடகத்தின் பின்னால் உள்ள தேவை குறித்து எனக்கு புரியவில்லை.. திக்விஜய சிங்
பா.ஜ.க.வினர் மவுன போராட்டம்

குவாலியரிலிருந்து 200-250 கி.மீட்டர் தொலைவில் உள்ளது உத்தர பிரதேசத்தில் ஹத்ராஸ் என்று அழைக்கப்படும் இடம் உள்ளது. அங்கு ஒரு தலித் பெண் பாலியல் பலாத்காரம் மட்டும் செய்யப்படவில்லை, அம்மாநில பா.ஜ.க. காவல்துறை இறந்த பெண்ணின் உடலை கூட அவரது உறவினர்களிடம் தகனம் செய்ய கூட கொடுக்கவில்லை? அப்பம் ஏன் பா.ஜ.க. அமைதியாக இருந்தது? சிவ்ராஜ் சிங் சவுகானும், சிந்தியாவும் இந்த சம்பவம் குறித்து ஏன் ஒரு வார்த்தை கூட பேசமால் அமைதியாக இருந்தனர்?. இவ்வாறு அவர் தெரிவித்தார்