’சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் சம்பளத்தைப் பிடிப்பதா?’ கே.எஸ்.அழகிரி கண்டனம்

 

’சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் சம்பளத்தைப் பிடிப்பதா?’ கே.எஸ்.அழகிரி கண்டனம்

கொரோனா நம்மை புதிய சூழலுக்குப் பழக்கப் படுத்தி வருகிறது, மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட லாக்டெளனால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதுவதில்லை. ஆயினும் அவற்றில் பணிபுரிபவர்களுக்கான சிக்கல் இருந்துகொண்டுதானே இருக்கும். குறிப்பாக சத்துணவு ஊழியர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது,

இந்த விவகாரம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

’சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் சம்பளத்தைப் பிடிப்பதா?’ கே.எஸ்.அழகிரி கண்டனம்

அவரது அறிக்கையில், ’கடந்த ஜுலை 7 ஆம் தேதி ஓய்வு பெறும் வயதை அறுபதாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சமூ  சமூக நலத்துறை ஆணையர், சங்கத்தினருக்கு எழுதிய கடிதத்தில் மனித நடமாட்டத்திற்கு தடை விதிக்கபட்டிருந்த நிலையில், அரசு விதிமுறைகளை மீறி கடந்த 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு பணியாளர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பாக போராட்டம் ஏன் நடத்தப்படுகிறது என்பதை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்பே சமூக நலத்துறை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால், இது குறித்து எந்த பேச்சுவார்த்தையோ, தீர்வு காணும் முயற்சிகளோ நடைபெறவில்லை.

’சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் சம்பளத்தைப் பிடிப்பதா?’ கே.எஸ்.அழகிரி கண்டனம்

சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக் குறித்து சமூக நலத்துறை செயலாளர் சங்கத்தினரை அழைத்து பிரச்சினையை பேசி தீர்க்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதை விட ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஏற்கெனவே சொற்ப ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது எந்த வகையிலும் நியாயமான செயலாக இருக்க முடியாது. அவர்களது வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் செயலாகும்.

எனவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களின் ஒருநாள் சம்பளத்தைப் பிடிக்கும் சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.