ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி

 

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தெரிவித்தார்.

ரிபப்ளிக் டிவி சேனல் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி, பார்க் அமைப்பின் முன்னாள் தலைவர் உடன் வாட்ஸ்அப்பில், பாலகோட் தாக்குதலை இந்திய விமான படை நடத்துவதற்கு முன்பு பேசிய தகவல் தற்போது கசிந்தது. அந்த உரையாடலில், புல்வாமா தாக்குதல் நடந்தது நல்லது என்றும், அதற்கு பதிலடியாக இந்தியா பெரிய தாக்குதலை நடத்தும் என்றும் பேசியிருந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஒரு விஷயம் எப்படி ஒரு செய்தியாளருக்கு தெரிந்தது. பாலகோட் தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரிந்த பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய விமானப்படை தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர்களில் ஒருவர்தான் அர்னாப் கோஸ்வாமிக்கு தெரிவித்து இருக்க வேண்டும். இது குற்றமாகும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி
அர்னாப் கோஸ்வாமி

இந்நிலையில், காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான ஏ.கே. அந்தோணி இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது: 2019ல் நடத்திய விமான படை தாக்குதல் குறித்த தகவல் கசிவு குறித்து மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்.

ராணுவ நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ ரகசியத்தை கசியவிடுவது ஒரு தேசத்துரோகம்… ஏ.கே. அந்தோணி
ஏ.கே. அந்தோணி

இந்த கசிவுக்கு எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் கருணை பெற தகுதியற்றவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். 2019 பிப்ரவரி 26ம் தேதியன்று பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழுவின் பயிற்சி முகாம்கள் மீது இந்திய விமான படை குண்டுகளை வீசி அழித்தது. இந்த தாக்குதல் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.