பச்சை துரோகம்… பாஜக எல்.முருகனை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி!

 

பச்சை துரோகம்… பாஜக எல்.முருகனை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி!

தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல்.முருகன் குரல் கொடுப்பது தமிழர் விரோதப் போக்கு என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான்கு பாஜக எம்எல்ஏக்கள் டெல்லியில் பிரதமரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியஎல்.முருகன், காவிரி நீரை வீணாக்குவது தமிழகம் தான். கர்நாடகா சரியாக நீர் வழங்குகிறது. காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் பேசியிருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பச்சை துரோகம்… பாஜக எல்.முருகனை வெளுத்து வாங்கிய கே.எஸ்.அழகிரி!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மாதாமாதம் வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்குவதில்லை. பற்றாக்குறை மாதங்களில் தர வேண்டிய தண்ணீரை கூட கர்நாடக அரசு வழங்குவது இல்லை. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாற வழிகோலும். இவ்வாறு தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல். முருகன் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்காகும். காவிரி மேலாண்மை வாரியத்துக்கு முழுநேர தலைவரை நியமிக்காமல் மத்திய பாஜக அரசு அலட்சியப் போக்குடன் செயல்படுகிறது.

கர்நாடகா வழங்கும் நீரை தமிழகம் வீணடிப்பதாக எல்.முருகன் கூறுகிறார். திமுக ஆட்சிக்கு வந்த 60 நாட்களில் அதற்கு வாய்ப்பு இல்லை. முருகனின் குற்றச்சாட்டு கடந்த 10 ஆண்டுகால அதிமுகவின் ஆட்சிக்கே பொருந்தும். இதை விட பச்சை துரோகத்தை பாஜக தமிழகத்திற்கு செய்ய முடியாது. காவிரிப் படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாக கருத்துக்களை கூறி இருக்கும் எல்.முருகன் கண்டிக்கிறேன். தமிழக மக்களுக்கு விரோதமாக கூறிய கருத்துக்களை திரும்பப் பெறவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.