குதிரை பேரத்தின் மறுபெயர் என கூறிய எச்.டி. குமாரசாமிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

 

குதிரை பேரத்தின் மறுபெயர் என கூறிய எச்.டி. குமாரசாமிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான எச்.டி. குமாரசாமி, குதிரை பேரத்தின் மறுபெயர் காங்கிரஸ் என அந்த கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அதனை மறுத்ததோடு, எச்.டி.குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் தொடர்ச்சியான ட்விட்களில்:

குதிரை பேரத்தின் மறுபெயர் என கூறிய எச்.டி. குமாரசாமிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

மற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் சேருவதற்கும், அரசியலமைப்பு நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கும், ஆபரேஷன் லோட்டஸ் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளும் அளவுக்கு எச்.டி.குமாரசாமி அவரே அப்பாவியாக இருந்தாரா? என பதிவு செய்து இருந்தது. மற்றொரு டிவிட்டில், நீங்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து முதலமைச்சரின் நாற்காலியில் அமர்ந்தபோது, காங்கிரஸ் கட்சியின் அறநெறி நன்றாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தீர்களா? கண்ணுக்கு தெரியாத மற்றும் அரசு கஷ்டத்தில் இருக்கும்போது உங்கள் கட்சியின் தார்மீகம் என்ன? என காங்கிரஸ் பதிவு செய்து இருந்தது.

குதிரை பேரத்தின் மறுபெயர் என கூறிய எச்.டி. குமாரசாமிக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தான் அரசை குதிரை பேரத்தில் ஈடுபட்டு கவிழ்க்க முயற்சி செய்வதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால் பா.ஜ.க. இதனை மறுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பா.ஜ.க. கவிழ்க்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி நாடு முழுவதுமாக ராஜ் பவன்களில் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் போராட்டத்தை நடத்தியது. இது குறித்து குமாராசாமி கருத்து தெரிவிக்கும்போதுதான் குதிரை பேரத்தின் மறுபெயர் காங்கிரஸ் என தெரிவித்தார்.