“காங்கிரஸ் என்பது பெரிய பொய்; அதை நம்பி தேர்தலில் நின்றேன்” : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு

“காங்கிரஸ் என்பது பெரிய பொய்; அதை நம்பி தேர்தலில் நின்றேன்” : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு

காங்கிரஸ் என்பது பெரிய பொய். முதலில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“காங்கிரஸ் என்பது பெரிய பொய்; அதை நம்பி தேர்தலில் நின்றேன்” : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. அதைப்போல் தமிழக அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளை ஆயத்தமாக முனைப்புடன் செய்து வருகின்றன.

“காங்கிரஸ் என்பது பெரிய பொய்; அதை நம்பி தேர்தலில் நின்றேன்” : கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், முதலில் காங்கிரஸ் கட்சி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என பொய்யான அறிக்கையை உருவாக்கி அதை தலைமைக்கு அனுப்பி உள்ளனர். இதை நம்பி நான் 2016ம் ஆண்டு தேர்தலில் நின்றேன். ஆனால் நமது உறுப்பினர்களே நமக்கு ஓட்டு போடவில்லை . 30,000 வாக்குகள் தான் ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் விழுந்து வந்தது. அப்படியிருக்கும்போது 70 லட்சம் உறுப்பினர்கள் எப்படி இருக்க முடியும்? பொய்யாக சந்தா தொகையை செலுத்தி பழைய பேப்பர்களை இவர்கள் டில்லிக்கு அனுப்பி உள்ளார்கள். டெல்லியில் இந்த பேப்பரை வைத்து நம் நிர்வாகிகள் பட்டாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் என்பது பெரிய பொய். முதலில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்”என்று பரபரப்பாகப் பேசியுள்ளார்.