’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை

’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை

அதிமுக , திமுகவுக்கு மாற்றாக வரும் பாஜகவுக்கு புதுரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது என்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை.

பாஜக வடக்கு மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்றது . இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவரும் . முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை

இக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியபோது, ‘’குழந்தைகள் முதல் மாணவ மாணவிகள் வரை குறைந்தது மூன்று மொழிகளை பயில்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் அரசியலில் லாபம் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள் புதிய கல்வி கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை ஏற்படுத்தி மக்களிடையே பாரதிய ஜனதா கட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை

இந்தி திணிப்பு குறித்து பாரதீய ஜனதா மீது தவறான பிரச்சாரங்களை மேற்கொள்ளுவது கண்டிக்கத்தக்கது.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ராஜீவ் தலைமையிலான மத்திய அரசின் போது கொண்டு வரப்பட்டது தான் இந்த இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்தி திணிப்பு குறித்து பாரதிய ஜனதா மீது சிலர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார்கள். இந்தி திணிப்பை எதிர்ப்பதாக மக்களிடையே போராட்டங்களை நடத்தும் திமுக வினர் நடத்தும் 47 பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் மொழிகளுக்கு பிறகு முன்றாவது மொழியாக இந்தி மொழியை கற்பிக்க வலியுறுத்தப்படுகிறது.

’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை

பாரதிய ஜனதா கட்சியை மக்கள் எதிர்நோக்கி காத்து இருப்பதாகவும் தமிழக மக்களாகிய வாக்காளர்கள் அதிமுக . திமுக வுக்கு ஜந்தாண்டுகளுக்கு ஒரு ஆட்சியமைக்கும் அதிகாரித்தை வழங்கிய மக்கள் வரும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் இருகட்சிகளுக்கு மாறி மாறி அளித்த ஆதரவை இந்த முறை பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய இருக்கிறார்கள் . அதிமுக , திமுகவுக்கு மாற்றாக மக்களிடையே பாரதிய ஜனதா கட்சியின் மீது இளம் தலைமுறையை சேர்ந்தவர்கள் மூலமாக புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது’’என்று தெரிவித்தார்.

’’காங்கிரஸ்தான் இந்தி திணிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது!’’ – அண்ணாமலை