மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல்… காங்கிரஸ் வலியுறுத்தல்!

 

மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல்… காங்கிரஸ் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற மக்களவைத் துணைத் தலைவர் பதவி ஓராண்டுக்கு மேலாகத் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், விரைவில் அதற்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல்… காங்கிரஸ் வலியுறுத்தல்!


மக்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை உள்ளது. இருப்பினும் அது பேரவை துணைத் தலைவர் தேர்தலை நடத்தாமலேயே உள்ளது. கடந்த நாடாளுமன்ற பதவிக் காலத்தில் அ.தி.மு.க-வின் தம்பிதுரைக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டது. இந்த முறை கூட்டணியில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க துணை சபாநாயகர் தேர்தலை நடத்தாமலேயே உள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயல்படும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு அந்த பதவியை விட்டுத்தர பா.ஜ.க தயாராக இருந்தது. ஆனால், அந்த கட்சிகள் ஏற்கவில்லை. இதனால், பா.ஜ.க -வும் தேர்தல் நடத்துவதை விரும்பாமல் உள்ளது.

மக்களவைத் துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல்… காங்கிரஸ் வலியுறுத்தல்!


இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இப்போதாவது துணை சபாநாயகர் தேர்தலை நடத்துங்கள் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுதிரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “துணை சபாநாயகரைத் தேர்வு செய்யாமலேயே அவை ஓராண்டை கடந்துவிட்டது. மழைக்கால கூட்டத் தொடரிலேயே தேர்தலை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.