“பலமிழக்கும் காங்கிரஸ்” – சொந்த கட்சியை கிழித்து தொங்கவிட்ட காங். தலைவர்!

 

“பலமிழக்கும் காங்கிரஸ்” – சொந்த கட்சியை கிழித்து தொங்கவிட்ட காங். தலைவர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் குளோபல் காந்தி அறக்கட்டளை சார்பில் ஜம்முவில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று தொடங்கியுள்ள நிகழ்ச்சியின் மூலம் காங்கிரஸ் கட்சியின் 23 அதிருப்தி தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, பூபேந்தர் சிங் ஹூடா, மணிஷ் திவாரி, உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதுதவிர பல்வேறு ஆலோசனைகளை மேற்கொள்கின்றனர்.

“பலமிழக்கும் காங்கிரஸ்” – சொந்த கட்சியை கிழித்து தொங்கவிட்ட காங். தலைவர்!

இந்த 23 பேரும் காங்கிரஸை சீரமைக்க வேண்டும் என தலைமைக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். கிடைக்கும் சமயத்திலெல்லாம் காங்கிரஸை நுணுக்கமாக விமர்சிக்கின்றனர். குலாம் நபி ஆசாத்தின் பிரியாவிடையின்போது கூட பிரதமர் மோடி இந்த 23 பேரின் கடிதத்தைக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய கபில் சிபல், “ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பலம் இழந்துகொண்டே வருகிறது. கட்சியை வலிமையாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்காகத் தான் இங்கு கூடியுள்ளோம்.

“பலமிழக்கும் காங்கிரஸ்” – சொந்த கட்சியை கிழித்து தொங்கவிட்ட காங். தலைவர்!

காங்கிரஸ் கட்சியின் கள நிலவரத்தை அடி ஆழம் வரை அறிந்துவைத்திருப்பவர் ஆசாத். இப்படிப்பட்ட திறமையான நிர்வாகியை ராஜ்யசபாவிலிருந்து விடுவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் பணியாற்றும் வகையில் மீண்டும் அவருக்கு எம்பி வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். அவரது அனுபவத்தை காங்கிரஸ் கட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என எனக்குப் புரியவில்லை” என்றார்.