கெடு முடிவடைதற்கு 2 நாட்கள் முன்னதாகவே அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி..

 

கெடு முடிவடைதற்கு 2 நாட்கள் முன்னதாகவே அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி..

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த அரசு பங்களாவை நேற்று காலி செய்தார். இனி, குருகிராம் செக்டார் 43 பென்ட்ஹவுஸ் அபார்ட்மெண்ட்டில் தனது கணவர் ராபர்ட் வத்ராவுக்கு சொந்தமான குடியிருப்பில் தங்குவார் என தகவல். குருகிராம் போலீசார் கடந்த 25ம் தேதியன்று டெல்லி-குருகிராம் எல்லையிலிருந்து பிரியங்கா காந்தியை குடியிருப்பு அழைத்து சென்றனர். மேலும் அவரது பாதுகாப்புக்காக ஒரு போலீஸ் குழுவும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

கெடு முடிவடைதற்கு 2 நாட்கள் முன்னதாகவே அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி..

சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வழங்கபட்டதை கருத்தில் கொண்டு, 1997ம் ஆண்டு டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள பங்களாவை பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு ஒதுக்கியது. அது முதல் பிரியங்கா காந்தி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது. அதற்கு பதில் இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கியது.

கெடு முடிவடைதற்கு 2 நாட்கள் முன்னதாகவே அரசு பங்களாவை காலி செய்த பிரியங்கா காந்தி..

இந்நிலையில், டெல்லி லோதி எஸ்டேட்டில் 35 எண்ணுள்ள பங்களாவில் வசித்து வரும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அங்கியிருந்து வெளியேறும்படி பிரியங்கா காந்திக்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் இம்மாத தொடக்கத்தில் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அதற்கு பிறகும் வீட்டை காலி செய்யவில்லை என்றால், விதிமுறைப்படி சேதாரம் அல்லது அபராத வாடகை வசூலிக்கப்படும் என அந்த நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டு இருந்தது. தற்போது மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் கொடுத்த காலக்கெடுவுக்கு 2 நாள் முன்னதாகவே அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைத்து விட்டார்.