பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. ஹரிஷ் ராவத் தகவல்

 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. ஹரிஷ் ராவத் தகவல்

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்தார்.

பஞ்சாப் காங்கிரசில் அந்த கட்சியின் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அம்மாநில முதல்வரான கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பஞ்சாப் அமைச்சர்கள் திரிபட் ராஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்க்காரியா, சுக்பீந்தர் சிங் ரந்தாவா மற்றும் சரண் சிங் சன்னி உள்பட 34 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கட்சி தலைமையிடம் வலியுறுத்தினர். இவர்கள் அனைவரும் சித்துவின் ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. ஹரிஷ் ராவத் தகவல்
நவ்ஜோத் சிங் சித்து

இந்த சூழ்நிலையில் நேற்று முதல்வர் அமரீந்தர் சிங் மீது அதிருப்தியில் உள்ளவர்களில் 4 அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவரும், பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளருமான ஹரிஷ் ராவத்தை சந்தித்து பேசினார். அதன் பிறகு சந்தித்த ஹரிஷ் ராவத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: நான்கு அமைச்சர்கள் மற்றும் 3 எம்.எல்.ஏ.க்கள் என்னை சந்தித்தனர். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். மாநிலத்தில் கட்சி வெற்று பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்கள் கவலைப்படுவதாகக் கூறினர். அவர்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல, நாங்கள் வெற்றி பெறுவதற்காக தெளிவான வழிகாட்டுதலுடன் தேர்தலுக்கு செல்ல விரும்புகிறோம்.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. ஹரிஷ் ராவத் தகவல்
காங்கிரஸ்

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர்களுக்கு சில குறைகள் இருந்தன. ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. தன்னை பாதுகாப்பற்றவராக கருதினால், நிர்வாகம் அவர்களை இழக்க அல்லது அவர்களுக்கு எதிராக அவர்கள் வேலை செய்ய முயற்சி செய்யலாம் என்று நினைத்தால் அது கவலைக்குரிய விஷயம். கட்சி அல்லது அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. எங்கள் வெற்றி வாய்ப்புகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. இந்த மக்களே எங்கள் வெற்றி வாய்ப்புகளை வழங்குவார்கள். ஒரு தீர்வு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.