பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி மாவட்ட தலைமையகங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி மாவட்ட தலைமையகங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பொது செயலாளர் கே.சி. வேணுகோபாலும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது ராகுல் காந்தி மாநில தலைவர்களுடன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனாவுடன் மோதல் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தோல்வியை வலுவாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி மாவட்ட தலைமையகங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்

நமது நட்பு மற்றும் அண்டை நாடுகளுடான உறவு மோசமடைந்துள்ளது இதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு. நேரடி பண பரிமாற்றம் வாயிலாக பொதுமக்களுக்கு உடனடியாக நிதி உதவி அளிக்கும் படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது ஆனால் அதனை அரசு ஏற்க தயாராக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். கல்வான் பள்ளதாக்கில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களை நினைவு கொள்ளும்விதமாக நாடு முழுவதும் தியாகிகளுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியை நாளை (26ம் தேதி) நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 29ம் தேதி மாவட்ட தலைமையகங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக வரும் 29ம் தேதியன்று நாடு முழுவதுமாக மாவட்ட தலைமையகங்களில் தர்ணா போராட்டம் நடத்த மாநில தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாட்டின் பல பகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் லாக்டவுனை நடைமுறைப்படுத்தி வரும் வேளையில், காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்த இருப்பது சர்ச்சை கிளப்பியுள்ளது.