கடந்த 30 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெல்லியிலுள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் தலைவர் டி.எஸ். ராணா தெரிவித்தார்.
இந்நிலையில் 73 வயதாகும் சோனியா காந்தி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக கட்சித்தொடர்பான பணிகளுக்கு வெளியில் வராத சோனியா காந்தி கடந்த பிப்ரவரி மாதம் இதே கங்காராம் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.