விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி!

 

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபுறம் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், வேட்பு மனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நடைபெற்றுவரும் சூழலில் மறுபுறம் அரசியல் கட்சிகள் தீவிர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. திமுகவுடனான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

விளவங்கோட்டில் மீண்டும் விஜயதாரணி போட்டி!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மீதமுள்ள 4 காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி விளவங்கோட்டில் விஜயதாரணி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள்

  1. வேளச்சேரி- ஜெ.எம்.எச்.ஹாசன்
  2. மயிலாடுதுறை- ராஜ்குமார்
  3. குளச்சல்- பிரின்ஸ்
  4. விளவங்கோடு- விஜயதரணி