ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரம்… பின்னணியில் யார்? : கேள்வியெழுப்பும் காங். வேட்பாளர்!

 

ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரம்… பின்னணியில் யார்? : கேள்வியெழுப்பும் காங். வேட்பாளர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற தினத்தன்று வேளச்சேரி தொகுதியில் களேபரம் நடந்தது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டவுடன், 4 இயந்திரங்கள் ஸ்கூட்டியில் எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. ஸ்கூட்டியில் எடுத்துச் சென்ற நபர்களை விரட்டிப் பிடித்த திமுகவினர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவை பழுதான மற்றும் பயன்படுத்தப்படாத இயந்திரங்கள் என தெரியவந்தது.

ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரம்… பின்னணியில் யார்? : கேள்வியெழுப்பும் காங். வேட்பாளர்!

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த இயந்திரங்களை இன்று ஆய்வு செய்த தலைமை தேர்தல் அதிகாரி, அதில் 15 வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் வாக்குப்பதிவு நடந்த அன்று முதல் 50 நிமிடங்கள் அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதே போன்று, ஸ்கூட்டியில் வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றது தேர்தல் விதிமீறல் என்றும் வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரம்… பின்னணியில் யார்? : கேள்வியெழுப்பும் காங். வேட்பாளர்!

முதலில் வாக்குப்பதிவின் போது அந்த இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 15 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் அதிகாரி கூறியிருப்பது எதிர்கட்சியினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் ஸ்கூட்டரில் வாக்கு இயந்திரம், விவிபேட்டை கொண்டு வர சொன்னது யார்? என விசாரிக்க வேண்டுமென்று வேளச்சேரி தொகுதி காங். வேட்பாளர் அசன் மவுலானா கோரிக்கை விடுத்துள்ளார். 15 வாக்கு கூட வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.