பழிவாங்கும் கதர் சட்டைகள்… குழிபறிக்கும் உபிக்கள் – புலம்பி தவிக்கும் விஜயதரணி!

பழிவாங்கும் கதர் சட்டைகள்… குழிபறிக்கும் உபிக்கள் – புலம்பி தவிக்கும் விஜயதரணி!

அதிமுகவுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவித்த பிறகு தான் பிரச்சினை என்றால் அதற்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் கலவரம் வெடித்தது. சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதமே நடத்திவிட்டார்கள். பணபலமிக்க வேட்பாளர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என ஜோதிமணி எம்பி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். இதுஒருபுறமிருக்க விளவங்கோடு சிட்டிங் எம்எல்ஏ விஜயதரணிக்கு சீட் வழங்கக் கூடாது என குமரி காங்கிரஸ் அலுவலகத்தில் போராட்டம் வெடித்தது.

பழிவாங்கும் கதர் சட்டைகள்… குழிபறிக்கும் உபிக்கள் – புலம்பி தவிக்கும் விஜயதரணி!

சூழல் இப்படியிருந்ததால் விஜயதரணி பாஜகவுக்கு தாவப் போவதாக தகவல்கள் கசிய இரவோடு இரவாக அவரை வேட்பாளராக்கியது காங்கிரஸ் தலைமை. பெரும் போராட்டத்திற்குப் பின்னர் சீட்டை பெற்றார் விஜயதரணி. ஆனால் மீண்டும் அங்கு ஜெயிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்கிறார்கள். காரணம் வெற்றிக்காக உழைப்பதே இல்லையாம். குறிப்பாக குமரி எம்பி தேர்தலில் வசந்தகுமாரின் பிரச்சாரத்தில் அம்மணி வரவே இல்லையாம். இதனால் கடும் அப்செட்டான காங்கிரஸ் நிர்வாகிகள் சமயம் பார்த்து பழிவாங்குகிறார்களாம்.

பழிவாங்கும் கதர் சட்டைகள்… குழிபறிக்கும் உபிக்கள் – புலம்பி தவிக்கும் விஜயதரணி!

விஜயதரணியே போன் செய்து அழைத்தாலும் ஆளை விடு தாயே என ஜகா வாங்குகிறார்களாம். நொந்து நூடுல்ஸான விஜயதரணி திமுக நிர்வாகிகளிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களைப் பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றாலும் தலைமையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கடமைக்கு உழைக்கிறார்களாம். பெரிதாக எதுவும் கண்டுகொள்வதில்லையாம். இதனால் பயங்கர அப்செட்டில் உள்ளே புழுங்கி கொண்டு வெளியே சிரித்துக்கொண்டே வாக்கு சேகரிக்கிறாராம் விஜயதரணி.

பழிவாங்கும் கதர் சட்டைகள்… குழிபறிக்கும் உபிக்கள் – புலம்பி தவிக்கும் விஜயதரணி!

உள்ளூர் உடன்பிறப்புகளிடம் இதுகுறித்துக் கேட்டால் அவர்கள் ஓபனாகவே உள்குத்து வேலையில் இறங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். அதாவது நாங்கள் கஷ்டப்பட்டு காங்கிரஸை ஜெயிக்க வைக்கிறோம். அதனால் தான் அவர்களுக்கே அந்தத் தொகுதிகளை ஒதுக்கிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தான் உள்ளடி வேலையில் இறங்கியிருக்கிறோம் என்கிறார்கள்.