திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: போட்டியிட்ட தொகுதிகளை கேட்க காங். திட்டம்!

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: போட்டியிட்ட தொகுதிகளை கேட்க காங். திட்டம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வேட்பாளர்களை களமிறக்க தயாராக இருக்கும் பிரதான கட்சிகள், அதற்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளன. அதன் படி, காங்கிரஸுடன் இன்று திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் பங்கேற்க காங்கிரஸின் மூத்த தலைவரான உம்மன் சாண்டி நேற்று சென்னை வந்தார்.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: போட்டியிட்ட தொகுதிகளை கேட்க காங். திட்டம்!

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், எத்தனை தொகுதிகளை கேட்பது? எந்த தொகுதிகளை கேட்பது? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். 4 மணி நேரம் நீடித்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, தேர்தலுக்காக திமுக கை கோர்த்திருக்கும் ஐ-பேக் நிறுவன ஊழியர்களுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில் ஐ-பேக்கின் முக்கிய நிர்வாகிகளான பிரசாந்த் கிஷோர், ரிஷி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை சுமார் 1.30 மணி நேரம் நீடித்தது.

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: போட்டியிட்ட தொகுதிகளை கேட்க காங். திட்டம்!

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. திமுக சார்பில் துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ் பாரதியும், காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கே.எஸ் அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது ஏற்கனவே போட்டியிட்ட இடங்களை காங்கிரஸ் கேட்க திட்டமிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.