வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் அளிப்போம்… காங்கிரஸ்

 

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் அளிப்போம்… காங்கிரஸ்

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா மீதான விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், அத்தியாவசிய விளைபொருட்கள் (திருத்த) மசோதாகளை நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் அளிப்போம்… காங்கிரஸ்
காங்கிரஸ்

வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மோடி அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடபோவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே. அந்தோணி செய்தியாளர்களிடம் கூறுகையில், விவசாய மசோதாக்களை திரும்ப பெறக்கோரி செப்டம்பர் 24 முதல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை கட்சி நடத்தும்.இந்த போராட்டம் நவம்பர் 14ம் தேதி முடிவடையும். மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி விவசாயிகளிடம் கையொப்பங்களை வாங்கி குடியரசு தலைவரிடம் கட்சி ஒப்படைக்கும். வேளாண் மசோதாக்கள், மாநில அரசு அல்லது மத்திய அரசு அல்லது விவசாயிகளின் நலனுக்கானது அல்ல என தெரிவித்தார்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவரிடம் அளிப்போம்… காங்கிரஸ்
அகமது படேல்

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் அகமது படேல் கூறியதாவது: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாங்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினோம். நாங்கள் தற்போது வீதிகளில் இறங்குவோம். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இயக்கம் திட்டமிடப்பட்டுள்ளது. நாங்கள் கிராம அளவுக்கு சென்று விவசாயிகளின் கையொப்பங்களை பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.