மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிட காங்கிரஸ்-இடதுசாரிகள் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் தேர்தலில் காங்கிரசும், இடதுசாரிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளன. தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..
பிமான் போஸ்

காங்கிரஸ், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற 77 இடங்களிலும் (காங்கிரஸ் 44, மார்க்சிஸ்ட் 33) மீண்டும் போட்டியிடுவது என்று இருகட்சிகளும் முடிவு செய்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்மூத்த தலைவர் பிமான் போஸ் கூறுகையில், இரு கட்சிகளும் தேர்தலில் இணைந்து பிரச்சாரம் செய்வது குறித்தும் ஆலோசித்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்-இடதுசாரிகள் தீவிரம்… முதல் கட்டமாக 77 தொகுதிகளுக்கு உடன்பாடு..
காங்கிரஸ்

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதிப் பட்டாச்சார்யா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 2016 மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வென்ற 44 மற்றும் 33 தொகுதிகளில் மீண்டும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய 217 தொகுதிகளுக்கு இரு கட்சிகளுக்கு இடையே பேச்சு தொடர்ந்து நடக்கும். இந்த மாத இறுதிக்குள் தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடியும் என நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.