உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்

உத்தர பிரதேச சட்டப்பேரவையின் பட கேலரியில் சாவர்க்கர் படம் திறக்கப்பட்டதற்கு காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

உத்தர பிரதேச விதான் பரிஷத் (சட்டப்பேரவை) பட கேலரியில் இந்து சிந்தாந்தத்துவாதி சாவர்க்கர் படத்தை திறந்து கடந்த சில தினங்களுக்கு முன் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார். இது அம்மாநில அரசியலில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பட கேலரியில் சாவர்க்கர் படம் இருப்பது அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் அவமானப்படுத்தது மற்றும் உடனடியாக அந்த படத்தை அங்கியிருந்து அகற்ற வேண்டும் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்
அகிலேஷ் யாதவ்

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இது தொடர்பாக கூறுகையில், சாவர்க்கரை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவதற்காக ஆங்கிலேயரிடம் அவர் எப்படி கெஞ்சினார், மன்னிப்பு கேட்டார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும். பா.ஜ.க. வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய படம் நமது சிறந்த சுதந்திர போராளிகளை அவமதிப்பதை தவிர வேறில்லை என்று தெரிவித்தார்.

உ.பி. சட்டப்பேரவையில் சாவர்க்கர் படம் திறப்பு.. பா.ஜ.க. அலுவலகத்தில் அந்த படத்தை வையுங்க.. கொந்தளித்த காங்கிரஸ்
காங்கிரஸ்

உத்தர பிரதேச மேலவை காங்கிரஸ் உறுப்பினர் தீபக் சிங், மேலவை தலைவர் ரமேஷ் யாதவுக்கு எழுதிய கடிதத்தில், பட கேலரியில் அவரது (சாவர்க்கர்) படம் இருப்பது அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் அவமானம். அதனை அங்கியிருந்து உடனடியாக அகற்ற வேண்டும். அந்த படத்தை பா.ஜ.க. அலுவலகத்தில் வைக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறுகையில், சாவர்க்கர் சிறந்த விடுதலை போராட்ட வீரர். சுதந்திர போராட்டத்தில் இவரது பங்களிப்பு காரணமாக 2 முறை ஆயுள் தண்டனை பெற்றார் என்று தெரிவித்தார்.