வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. இதனையொட்டி, கங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர், ரயில் நிலையத்தில் இருந்து நீதிமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர், நீதிமன்றம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணவிட்டால், பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்,கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லியில் உள்ள ரிலையன்ஸ் டிரன்ட்ஸ் நிறுவனம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிக்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் கடை திறப்பு சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.