“காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது” : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

“காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது” : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது” : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அரசியல் களம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. சட்ட பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் , ஜான்குமார்ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 14 ஆக குறைந்துள்ளது. 30 இடங்களில் பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் தற்போது காங்கிரஸ் கூட்டணிக்கு 14 இடங்கள் உள்ளதால் முதல்வர் நாராயணசாமியின் ஆட்சிக்கு நெருக்கடி உண்டாகியுள்ளது.

“காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது” : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

காங். எம்எல்ஏக்கள் ஆளுநர் கிரண்பேடி, மத்திய அரசின் கெடுபிடியால் ராஜினாமா செய்வதால் , புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறியிருந்தார்.

“காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது” : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. பேரவையில் எங்கள் பெரும்பான்மையை நிரூபிப்போம். அதனால் புதுச்சேரி அமைச்சரவை ராஜினமா செய்யப்படாது. புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதால் இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்” என்றார்.