எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தொடரை புறக்கணிக்கும்- காங்கிரஸ் எம்.பி அறிவிப்பு!

எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தொடரை புறக்கணிக்கும்- காங்கிரஸ் எம்.பி அறிவிப்பு!

8 எம்.பிக்கள் மீதான சஸ்பெண்டை திரும்பப்பெறவில்லை என்றால் மாநிலங்களவையை புறக்கணிப்போம் என காங்கிரஸ் எம்.பி குலாம் அபி ஆசாத் அறிவித்துள்ளார்.

மக்களவையில் நிறைவேறிய வேளாண்துறை தொடர்பான 3 மசோதாக்கள் கடந்த 20ம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அவைத் துணை தலைவர் ஹரிவன்ஷ் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, ஹரிவன்ஷ் அளித்த புகாரின் பேரில் 8 எம்.பிக்களை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.

எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தொடரை புறக்கணிக்கும்- காங்கிரஸ் எம்.பி அறிவிப்பு!

அவையில் இருந்து தங்களை நீக்கியதால் 8 எம்.பிக்களும் நேற்று பிற்பகலில் இருந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தேநீர் கொடுக்க முயன்ற நிலையில், அவர்கள் அதனை புறக்கணித்ததால் தான் அவையில் அவமதிக்கப்பட்டதாகவும் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாகவும் அவை துணை தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை தொடரை புறக்கணிக்கும்- காங்கிரஸ் எம்.பி அறிவிப்பு!

இந்த நிலையில், 8 எம்.பிக்கள் மீதான வாபஸை திரும்பப்பெறவில்லை என்றால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவை கூட்டத்தொடரை புறக்கணிக்கும் என காங்கிரஸ் எம்.பி குலாம் அபி ஆசாத் அறிவித்திருக்கிறார். மேலும், குறைந்த பட்ச ஆதார விலைக்கு குறைவாக பயிர்களை தனியார் கொள்முதல் செய்வதை தடுக்க மசோதா தேவை என்றும் அவர் தெரிவித்தார்.