• April
    05
    Sunday

Main Area

Main



ப. சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டுவது ஏன்? காங்கிரஸ் குற்றச்சாட்டு!

சிதம்பரம்
சிதம்பரம்

மத்திய அரசு ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகக் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

chithambaram

கடந்த 2007ம் ஆண்டு, சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது, மேலும் இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கும் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டி வருகின்றது. 

hc

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த  டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி  தாக்கல் செய்த மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.  ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ, அமலாக்கத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் அவருடைய வீட்டை சோதனை செய்தனர். 

congress

இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, 'ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் அவர் கைது செய்ய சிபிஐ அவசரப்படுவது ஏன்? அவர் சம்மந்தப்பட்ட எல்லா வழக்குகளிலும் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பவர். முழு ஒத்துழைப்பை அளிப்பவர். அப்படி இருக்கும்போது  அவரை கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?' என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு ப.சிதம்பரத்தை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.  பாஜக தலைவர்கள் பலர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கும் போது, இந்த விவகாரத்தில் மட்டும் தீவிரம் காட்டுகிறார்கள். இதற்கு மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது' என்றும் கடுமையாகச் சாடினார். 

2018 TopTamilNews. All rights reserved.