’இருமொழிக்கல்விக்கு முதல்வருக்குப் பாராட்டு. அதனால்…’பாமக ராமதாஸின் இன்னொரு கோரிக்கை

 

’இருமொழிக்கல்விக்கு முதல்வருக்குப் பாராட்டு. அதனால்…’பாமக ராமதாஸின் இன்னொரு கோரிக்கை

’புதிய கல்விக் கொள்கை’ இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு 2017 ஆண்டிலிருந்து உருவாக்கியது. இதனை கடந்த ஆண்டு (2019) மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலிடம் கொடுத்தது. அதன்மீது நாட்டு மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. சில நாள்களுக்கு முன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றிருக்கிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவைச் சந்தித்து மனித வள மேம்பாட்டு அமைச்சர் கல்விக் கொள்கையை அளித்துள்ளார்.

’இருமொழிக்கல்விக்கு முதல்வருக்குப் பாராட்டு. அதனால்…’பாமக ராமதாஸின் இன்னொரு கோரிக்கை

புதிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கை அம்சம் தமிழகத்தின் பெரும்பான்மையான கட்சித் தலைவர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறது. முன்னாள் முதல்வர் பின்பற்றிய இருமொழி கொள்கைக்கு ஆபத்து என்றும் விமர்சனம் எழுந்தன. இதனால் தமிழக முதல்வர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

’இருமொழிக்கல்விக்கு முதல்வருக்குப் பாராட்டு. அதனால்…’பாமக ராமதாஸின் இன்னொரு கோரிக்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்றும் இருமொழி கொள்கையே தொடரும். தமிழ் மொழிக்கோ அல்லது தமிழுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு நடவடிக்கை எடுக்கும். தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தந்த மாநிலங்களில் தங்களுக்கு ஏற்ப கொள்கையை பயன்படுத்திக் கொள்ள பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

முதல்வரின் முடிவைப் பாராட்டும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ், இன்னொரு கோரிக்கையையும் வைக்கிறார்.

அவர், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. இதைத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது!

மும்மொழிக் கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்துக் காரணங்களும் 3, 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழ்நாட்டில் 8-ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.