பாதையை அடைத்து வேலி… இரு தரப்பிடம் சமரசம் செய்த தி.மு.க எம்.பி-க்கு குவியும் பாராட்டு!

 

பாதையை அடைத்து வேலி… இரு தரப்பிடம் சமரசம் செய்த தி.மு.க எம்.பி-க்கு குவியும் பாராட்டு!

பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் வேலி அமைத்ததால் வீட்டுக்கு செல்ல முடியாமல் விவசாயி தவித்த விவகாரத்தில் இரு தரப்பினரும் தி.மு.க எம்.பி பேச்சுவார்த்தை நடத்தியது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே சிடுவம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் முத்துகுமரன் மற்றும் வடிவேலு இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமரன் தன்னுடைய நிலத்தைச் சுற்றி வேலி அமைத்தார். இதனால், வடிவேலு தன்னுடைய விவசாய நிலத்துக்கு, வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
வருவாய்த் துறையில் புகார் அளித்த நிலையில், இரு விவசாயிகளையும்

பாதையை அடைத்து வேலி… இரு தரப்பிடம் சமரசம் செய்த தி.மு.க எம்.பி-க்கு குவியும் பாராட்டு!

அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் நிலத் தகராறு தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறினர். என்ன முடிவெடுத்தாலும் சரி வேலியை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்த மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கூறிவிட்டு முத்துக்குமரன் வந்துவிட்டார். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வந்தது. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்துக்கு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் நேரில் சென்றார். அங்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார்.
இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேசிய எம்.பி செந்தில் குமார், இந்த விவகாரத்தில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாதவாறு கலந்தாலோசித்து சுமுக முடிவெடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பாதையை அடைத்து வேலி… இரு தரப்பிடம் சமரசம் செய்த தி.மு.க எம்.பி-க்கு குவியும் பாராட்டு!


ஏற்கனவே நடந்த வருவாய்த் துறையினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் தங்கவேலுவுக்கு மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் படி அவர் நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இன்றைக்குள் முடிவெடுத்து வேலியை அகற்றுவதாக முத்துக்குமரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது கிராம மக்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தன்னுடைய தொகுதியில் பிரச்னை என்று தெரிந்ததும் நேரில் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் எம்.பி ஈடுபட்டதற்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.