காங். மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!

 

காங். மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த காங். மூத்த தலைவர் மோதிலால் வோரா இன்று மாலை காலமானார்.

காங். மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மோதிலால் வோராவுக்கு வயது 93. கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்ததாக தெரிகிறது.

காங். மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!

இந்த நிலையில், கொரோனா தொற்று பாதித்த மோதிலால் வோரா இன்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மோதிலால் வோராவின் மரணம் காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.