10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்… முதல்வருடன் செங்கோட்டையன் ஆலோசனை!

 

10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்… முதல்வருடன் செங்கோட்டையன் ஆலோசனை!

தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் நிலவுவதால் இது குறித்து முதல்வருடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. காலாண்டு, அரையாண்டு, வருகைப் பதிவு அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம்… முதல்வருடன் செங்கோட்டையன் ஆலோசனை!

மேலும், சில பள்ளிகள் புதிதாகக் காலாண்டு, அரையாண்டு தேர்வை வீட்டிலிருந்தே எழுத வைத்து அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதாகவும் கூறப்பட்டது. சில பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் தொலைந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனால் மதிப்பெண்கள் வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்து சில பரிந்துரைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கிரேடு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவது குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.