கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

 

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரம் எடுத்துள்ளன. இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் 3 வது அணி அமைக்க முயற்சிகள் எடுப்பதால் கூட்டணிகளில் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் கூறியதாவது, பாராளுமன்ற தேர்தலில் கட்சிக்கு வயது ஒன்று. தவழும் குழந்தையாக இருந்தபோதே நாங்கள் தமிழ்நாட்டில் 4 சதவீத வாக்குகள் பெற்றொம். இப்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்திவிட்டோம். அதனால் தான் கமல் நாங்கள் தான் 3 வது பெரிய கட்சி என்று நம்பிக்கையுடன் கூறினார். கூட்டணி விசயத்தில் கமல் எடுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் எங்களுக்கு சம்மதம் தான். முக்கிய திராவிட கட்சிகள் இரண்டையும் பலவீனப்படுத்தினாலே தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு வெற்றி தான். அதன் பின்னர் பலவீனமான கூட்டணி அமைந்தால் எங்கள் வெற்றி இன்னும் சுலபமாகி விடும். அதற்கான பணிகள் தான் இப்போது நடக்கிறது.

தமிழகத்தில் இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சியை பிடிக்கின்றன. எனவே இந்த 2 கட்சிகளுக்குள்ளும் மறைமுக கூட்டணி ஏற்பட்டு விட்டது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சமும் ஊழலும் தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிருப்தி

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி அரசியலுக்குள் நுழைய காரணமே இந்த மக்கள் அதிருப்தி தான். அந்த வகையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்துவிட்டோம். இனி மக்கள் தங்களுக்கு மாற்று வேண்டுமா வேண்டாமா என்பதை தான் முடிவு செய்யவேண்டும். அதாவது இந்த தேர்தலே கமல்ஹாசன் என்ற நேர்மையான, வலிமையான தலைமை வேண்டுமா? வேண்டாமா? என்றுதான் அமையும்.

நல்லவர்கள் எங்களுடன் இணைவார்கள் என்ற அறிவிப்பு 2 கூட்டணிகளிலும் அங்கீகாரத்துக்கு போராடும் கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. கூட்டணி விசயத்தில் நாம் எங்கும் விருந்தோம்பலுக்கு செல்ல வேண்டியது இல்லை. பதிலாக நம் விருந்துக்கு தான் எல்லோரையும் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

புகைச்சல்கள்

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

இது தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தவிர மற்ற கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தான். மற்ற 2 கூட்டணிகளும் பார்ப்பதற்கு வலுவாக தெரிந்தாலும் உள்ளுக்குள் ஏகப்பட்ட புகைச்சல்கள் நிலவுகின்றன.

தி.மு.க. கூட்டணியில் தி.மு.க.வை அடுத்து பெரிய கட்சி காங்கிரஸ் தான். அந்த கட்சியே சீட்டுகள் எண்ணிக்கையில் அதிருப்தியில் இருப்பதால் கமல்ஹாசன் தலைமையிலான கூட்டணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் சேர்ந்திருக்க வேண்டிய நாங்கள் சட்டமன்ற தேர்தலிலாவது கைகோர்ப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கமல் எப்போதுமே கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நட்பு பாராட்டுபவர். அவர்கள் உள்ளே வருவதில் எந்த சிக்கலும் இருக்காது. தே.மு.தி.க., பா.ம.க., என கூட்டணிகளில் சீட்டு விசயத்தில் அவமதிக்கப்படும் கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும் வாய்ப்புகள் இருக்கிறது.

காங்கிரஸ்

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?



இதுவரை வேறு வழி இல்லாமல் இரண்டில் ஒரு கூட்டணியில் சேர்ந்தவர்கள் 3 வது ஒரு தேர்வு அமையும்போது நிச்சயம் வருவார்கள். சின்னம் விஷயத்தில் இந்த கட்சிகளுக்கு போடப்படும் கட்டுப்பாடுகளாலும் அதிருப்தியில் இருக்கிறார்கள். சீட்டு, சின்னம் இரண்டு விஷயங்களிலும் ஏற்படும் அதிருப்திகள் கூட்டணிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். எங்களுக்கு சாதகமாக அமைந்து வலுவான கூட்டணி அமையும்.

வலுவான கூட்டணி

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?



எங்கள் கட்சி தேசிய கட்சியாக வரவேண்டும் என்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கமல்ஹாசனோ நமது சின்னத்தில் இருக்கும் 6 கரங்களும் 6 தென்னிந்திய மாநிலங்களை தான் குறிக்கும். எனவே தேசிய கட்சியாக நாம் மாறுவோம் என்றார். இது எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மற்ற கட்சிகள் இன்னும் தேர்தல் வேலைகளை தொடங்காத நிலையில் நாங்கள் கள பணிகளில் இறங்கிவிட்டோம்.

தேசிய கட்சி

கமல்ஹாசனால் தமிழக அரசியல் கூட்டணிகளில் குழப்பம்.!?

இந்த மாதமே பிரசாரத்தை தலைவர் தொடங்குகிறார். அதன் பின் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் வேகம் எடுக்கும்’. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கமல்ஹாசன் உண்மையில் கூட்டணிகளுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்துவாரா என்பதே இப்போதைய தமிழக் அரசியல் பரபரப்பு. இன்னும் சில மாதங்களில் இதற்கான விடை தெரிந்துவிடும்.