பொங்கல் பரிசு பணம் வாங்குவதில் தகராறு- தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது

 

பொங்கல் பரிசு பணம் வாங்குவதில் தகராறு- தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது

திண்டுக்கல்

தஞ்சையில் பொங்கல் பரிசு பணம் 2,500 ரூபாய் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் தம்பியை அடித்துக்கொன்ற, அண்ணனை போலீசார் கைதுசெய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சிரமேல்குடி பழைய அக்கரகாரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமன். இவரது மகன்கள் பாலசுப்ரமணியம் மற்றும் விஸ்வலிங்கம். நேற்று ராமன், தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகையான 2500 பணத்தை வாங்கியுள்ளார். இந்த நிலையில், வீட்டிற்கு வந்த ராமனிடம் பணத்தை கேட்டு இளைய மகன் விஸ்வலிங்கம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ராமனை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பொங்கல் பரிசு பணம் வாங்குவதில் தகராறு- தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன் கைது

தந்தை தாக்கப்பட்டதை அறிந்த மூத்த மகன் பாலசுப்ரமணியம், தட்டிக்கேட்ட போது சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்கவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த பால சுப்ரமணியம் அருகே கிடந்த உருட்டு கட்டையால் விஸ்வலிங்கத்தை கடுமையாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலின் பேரில் மதுக்கூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைதுசெய்தனர்.