திமுக கூட்டணியில் சீட்டு மோதல் : அப்செட்டில் ஸ்டாலின்

 

திமுக கூட்டணியில் சீட்டு மோதல் : அப்செட்டில் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழக பிரதான கட்சிகளாக பார்க்கப்படும் திமுக , அதிமுக கட்சிகள் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இடம்பிடிக்காமல் இருந்த நிலையில், இந்த முறை ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது.

திமுக கூட்டணியில் சீட்டு மோதல் : அப்செட்டில் ஸ்டாலின்

இந்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு பிரச்சனையும் தலைதூக் ஆரம்பித்துவிட்டது. கடந்த முறை குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றியது. இதில் காங்கிரஸ் 3 தொகுதி, திமுக 3 தொகுதி என வெற்றிபெற்றது. இதனால் இந்த முறையும் அதே தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டியுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த முறை ஒரு சீட்டை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுகவோ வேறு கணக்கு போட்டுள்ளது. அதாவது கடந்த முறையை விட இந்த முறை தேர்தலில் ஒரு தொகுதியாவது கூடுதலாக நின்று வெற்றி பெற்றிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதனால் அந்தந்த கட்சியினர் சீட்டு கேட்டு தலைமையை நச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.இந்த சீட்டு மோதல் எதிரொலியால் கூட்டணிக்குள் மட்டுமல்லாமல் கட்சிக்குள்ளேயே பூசல்கள் வெடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இதனால் ஸ்டாலின் அப்செட்டாகியுள்ளாராம். தேர்தல் முடியும் வரை கூட்டணியை சிதறவிடாமல் இருப்பதே பெரும்பாடாக இருக்கும் போல என்று புலம்புகிறார்களாம் திமுக கரைவேட்டிகள்.

திமுக கூட்டணியில் சீட்டு மோதல் : அப்செட்டில் ஸ்டாலின்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ஓரிரு தொகுதிகள் அளித்தாலே போதுமானது. அதனால் அதிமுக தரப்பில் பெரிய அளவில் மல்லுக்கட்டு இல்லை. இதுவொருபுறமிருக்க காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் மறைந்த நிலையில் அவரது கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிட போராடி வந்தாலும் இந்த முறை அவருக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் சீட்டு மோதல் : அப்செட்டில் ஸ்டாலின்

கடந்த தேர்தலில் பொன்னார் மண்ணை கவ்வியது, அவர் முகத்தை பார்த்து அலுத்து விட்டது போன்ற காரணங்களால் இந்த முறை ஒரு புதிய முகத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார்கள் பாஜக தரப்பினர்.அது யாராக இருக்கும் என்பது உங்கள் கற்பனைக்கு…!