ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதலா? செல்லூர் ராஜூ விளக்கம்!

 

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதலா? செல்லூர் ராஜூ விளக்கம்!

திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அரசு நிகழ்ச்சிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தவறாமல் பங்கேற்று வருகிறார். அவருக்கு அமைச்சருக்கு நிகராக மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றபோது ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருடன் ஒரே மேசையில் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதலா? செல்லூர் ராஜூ விளக்கம்!

அதேபோல் அரசு நிகழ்ச்சிகளை எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் புறக்கணித்து வருகிறார். அதேபோல் இருவரும் தனித்தனியே அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். ஓபிஎஸ் முதல்வருக்கு வைக்கும் கோரிக்கைகளுக்கு, அரசு அதிகாரிகள் உடனே தொடர்புகொண்டு பதிலளிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதலா? செல்லூர் ராஜூ விளக்கம்!

இந்நிலையில் தமிழக அரசின் கூட்டங்களில் ஓபிஎஸ் பங்கேற்பதும் , ஈபிஎஸ் புறக்கணிப்பதும் பற்றிய கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே எதுவுமில்லை. இரட்டை குழல் துப்பாக்கி போல அதிமுகவை சிறப்பாக வழி நடத்துகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.