தடையை மீறி மாநாடு – ஆம்பூரில் எல்.முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

 

தடையை மீறி மாநாடு – ஆம்பூரில் எல்.முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே அனுமதியின்றி மாநாடு நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மாநில செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம் பகுதியில் நேற்று மாலை பாஜக மாவட்ட நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில், கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுசெயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்சியினர் இடையே உரையாற்றினர்.

தடையை மீறி மாநாடு – ஆம்பூரில் எல்.முருகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், பாஜகவினர் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஆலங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்,
144 தடை உத்தரவை மீறி கூடுதல், கொரனோ வைரஸ் தொற்று பரவும் வகையில் கூடியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் எல்.முருகன், கே.டி ராகவன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், வாசுதேவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்