வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

திருச்சி

திருச்சியில் விவசாய சங்கத் தலைவர் அய்யக்கண்ணு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து, விவசாயிகள் அரை மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கவும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார். இதற்காக திருச்சியில் இருந்து ரயில் மூலம் இன்று காலை 500 விவசாயிகள் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தனர்.

வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

இந்த நிலையில், நேற்றிரவு திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிற்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட போலீசார், அவரை டெல்லி செல்ல விடாமல் வீட்டுக்காவலில் வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், இன்று காலை அய்யாக்கண்ணுவின் வீட்டிற்கு முன்பு திரண்டனர். அப்போது, வீட்டுக்காவலில் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் அரை மொட்டை அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுக்காவலை கண்டித்து, அய்யாக்கண்ணு அரைமொட்டை அடித்து நூதன போராட்டம்

தொடர்ந்து, வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ற அவர்கள் கரூர் பைபாஸ் சாலை பகுதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்களை மாநகர காவல் துணை ஆணையர் வேதரத்தினம் சமரசம் செய்து, கலைந்து செல்ல செய்தார்.