கட்டாயம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

 

கட்டாயம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கட்டாயம் குடும்பப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கட்டாயம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதி அமைச்சர் பிடிஆர் நாகராஜன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘’நில எடுப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. நில எடுப்பு பணியை விரிவுபடுத்துவதற்காக 5 மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களில் மரங்கள் நடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக மதுரை , திருச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பாலங்கள் கட்டப்படவில்லை. மதுரையில் புதிதாக மூன்று புதிய பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கட்டாயம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

ஊராட்சி ஒன்றிய சாலைகளை தரம் உயர்த்தச் சொல்லி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். எம்எல்ஏக்களின் இந்த கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கையை கேட்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2000 கிலோ மீட்டர் சாலைகள் தரமுயர்த்தப்பட இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

பழனி- கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொடைக்கானல்-மூணாறு இடையே சாலை அமைக்கவும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

கட்டாயம் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு உறுதி

அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி அந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பதைத்தான் மக்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அது எப்போது அமலுக்கு வரும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எ.வ.வேலு, ‘’ ஐந்தாண்டு காலம் ஆட்சி புரிய எங்களை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களித்துள்ளனர் தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அப்படி இருக்கும் போது கட்டாயம் குடும்பப் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாயும் வழங்கப்படும். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்’’ என்று உறுதியளித்தார்.