பொது முடக்கத்தால், குமரி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

 

பொது முடக்கத்தால், குமரி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

கன்னியாகுமரி

முழு பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு பொதுமுடக்கம் காரணமாக வாகன போக்குவரத்துக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கடைகள், வணிக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் வழக்கம்போல செயல்பட்டன.

பொது முடக்கத்தால், குமரி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்!

இதனால் மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு, வடசேரி பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல், புகழ்பெற்ற கன்னியாகுமரி கடற்கரை பகுதி மற்றும் முக்கடல் சங்கமம் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

பொதுமுடக்கத்தை யொட்டி, ஊரடங்கை மீறி வெளியே வருவோரை கண்காணிக்க நகரில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து, மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.