மத்திய மண்டலத்தில் 94 கிராமங்களில் முழுமையாக கள்ளச்சாராயம் ஒழிப்பு… ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தகவல்!

 

மத்திய மண்டலத்தில் 94 கிராமங்களில் முழுமையாக கள்ளச்சாராயம் ஒழிப்பு… ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தகவல்!

திருச்சி

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் 94 கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டு உள்ளதாக ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச் சாராயம் விற்பனை மற்றும் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்தில் 60, புதுக்கோட்டை மாவட்டத்தில் 15, கரூர் மாவட்டத்தில் 29, பெரம்பலூர் மாவட்டத்தில் 26, அரியலூர் மாவட்டத்தில் 23, தஞ்சை மாவட்டத்தில் 7, திருவாரூர் மாவட்டத்தில் 30, நாகை மாவட்டத்தில் 19 மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 20 கிராமங்கள் என மொத்தமாக 299 கிராமங்கள் கண்டறியப்பட்டது.

மத்திய மண்டலத்தில் 94 கிராமங்களில் முழுமையாக கள்ளச்சாராயம் ஒழிப்பு… ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தகவல்!

இந்த கிராமங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் கள்ளச் சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தியதன் விளைவாக தற்போது அப்படி அடையாளம் காணப்பட்ட கிராமங்களில் இருந்து 94 கரும்புள்ளி கிராமங்கள் முழுமையாக கள்ளச்சாராயம் காய்ச்சல் மற்றும் விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

இவற்றில் திருச்சியில் 19, அரியலூரில் 50, கரூரில் 7, பெரம்பலூரில் 6, புதுக்கோட்டை, நாகை மற்றும் மயிலாடுதுறையில் தலா 4 என மொத்தம் 94 கிராமங்கள் முழுமையாக கள்ளச்சாராய விற்பனை அழிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய கிராமங்களில் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு மத்திய மண்டல ஐ,ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.